முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: புல்லட் ரெயில் சேவை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ  - ஜப்பான் நாட்டை நேற்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானது. நேற்றைய நிலநடுக்கத்தால் யுரிஹாமா நகரில் வீடு இடிந்து விழுந்ததாகவும், குரயோஷி நகரில் பலர் காயமடைந்ததாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்