முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாதானம், உரிமைகள் விவகாரங்களில் இலங்கை அரசு மந்தம்: தமிழர்கள் அதிருப்தி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும் அதிருப்தியிலும் இருந்து வருவதாக பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது. உலக தமிழ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ராணுவமற்ற பிரதேசமாக மாற்றுவதிலும் இயல்பு வாழ்க்கையை மீட்டுத்தருவதிலும் இலங்கை அரசு எந்தவித துரிதச் செயல்பாடும் இல்லாமல் மந்தமாக உள்ளது.

மேலும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதானமாக வாழும் முயற்சிகளிலும் இலங்கை அரசிடம் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இவை குறித்து அரசியல் தலைவர்களிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான, கலவையான கூற்றுகளே வெளிவருவதால் தமிழ் மக்களிடையே மீண்டும் அவநம்பிக்கையும், அதிருப்தியும் உருவாகியுள்ளது. எனவே இந்த அதிருப்தியைப் போக்க அரசு விரைந்து செயல்படுதல் அவசியம்.” என்று கூறியுள்ளது.

சிறுபான்மையினர் விவகாரங்கள் குறித்த ஐநா சிறப்புத் தூதரின் கருத்துகள் இங்கு முக்கியமானவை என்று இந்தக் குழு கருதுகிறது. அதாவது இனக்குழுக்களிடையே சமாதான கூட்டு வாழ்வு, நன்கு திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட உண்மை, நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றுடன் கூடிய குணப்படுத்தும் நடைமுறை அவசியம் என்று ஐநா சிறப்புத் தூதர் கூற்றை இந்தக் குழு மீண்டும் எதிரோலித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago