முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவி தற்கொலை வழக்கில் கபடி வீரர் ரோஹித் குமார் கைது

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - மனைவி தற்கொலை வழக்கில் தேசிய அளவிலான கபடி விளையாட்டு வீரர் ரோஹித் குமார் மற்றும் அவரது தந்தையை மும்பையில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.  டெல்லியின் மேற்கு மாவட்டமான நங்லாய் பகுதியை சேர்ந்தவர் லலிதா. இவருக்கும், டெல்லியின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ஹாவ்லா கிராமத்தைச் சேர்ந்த தேசிய அளவிலான கபடி விளையாட்டு வீரர் ரோஹித் குமாருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நங்லாயில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் லலிதா தற்கொலை செய்து கொண்டார். அதற்குமுன் தற்கொலை முடிவுக்கு மாமனார், மாமியார் தான் காரணம் என வீடியோவில் பதிவு செய்து வைத்தார். சிறு விவகாரங்களுக்கு கூட கணவர் வீட்டார் தன்னை சித்திரவதை செய்ததாகவும், தன்னை விட்டு பிரிந்துவிடும்படி கணவர் ரோஹித் வற்புறுத்தியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து கபடி வீரர் ரோஹித் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்ததும், ரோஹித் பெற்றோர் கஞ்ச்ஹாவ்லா கிராமத்தில் இருந்து தலைமறைவாகினார். இதனால் அவர்களை பிடிப்பதற்காக டெல்லி போலீஸார் இரு தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது கடற்படையில் பணியாற்றி வரும் ரோஹித்தை மும்பையில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். அதே சமயம், ரோஹித்தின் தந்தையும் டெல்லி போலீஸ் துறையின் எஸ்.ஐ.யுமான விஜய் சிங் நங்லாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் இருந்து அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்ட ரோஹித், ‘‘வரதட்சிணை கேட்டு எனது மனைவியை நான் கொடுமைப்படுத்தவில்லை. எனது மாமனார் இதை நன்கு அறிவார். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடந்தாலும் உண்மை என்னவென்பதை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்துவேன். அதன் பின் நானும் எனது மனைவியுடன் சென்றுவிடுவேன். எனக்கு வாழ்வதற்கே விருப்பமில்லை’’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago