முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தாக்குதலால் எல்லையோர மக்கள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - பாகிஸ்தானின் தொடர் தாக்குதலால் இந்திய எல்லை கிராமங்களில் இருந்து 400 பேரை ராணுவத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கத்துவா மாவட்டத்தின் போபியா, ஹிராநகர் கிராமவாசிகளே அதிகளவில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.  கடந்த 20, 21 தேதிகளில் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிய ரக பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தியும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் எல்லையோர கிராமவாசிகள் பெரிய அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில், போபியா, ஹிராநகர் பகுதிகளில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டனர். குண்டு துளைக்காத வாகனங்களில் வந்த ராணுவத்தினர் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது 400 பேர் ஹிராநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக கத்துவா மாவட்ட துணை கமிஷனர் ரமேஷ் குமார் கூறும்போது,

"கடந்த இரண்டு நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பீதியில் இருந்தனர். தற்போது குறைந்தது 400 பேரையாவது மீட்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும் என எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி. டி.கே.உபாத்யாயா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்