முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் உளவாளி கைது

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம்  சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளி நேற்று கைது செய்யப்பட்டார்.  ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் எல்லை மாநிலம் ஆகும் . அதன் எல்லை பகுதி பாகிஸ்தான் எல்லையை யொட்டி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி  மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில், பி.எஸ்.எப். படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் , நேற்று முன்தினம் ,  எல்லை கட்டுப்பாடு கோடு(எல்.ஓ.சி.) பகுதியில்   ஜம்முவின் ஹிரா செக்டரில்,பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு பி.எஸ்.எப்.  வீரர்கள் பதிலடி தந்தார்கள் . இந்த தாக்குதலில்  7 பாகிஸ்தான் வீரர்களும் , ஒரு தீவிரவாதியும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்கள்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில்,  பாகிஸ்தான் உளவாளி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனுப்பும் உளவாளியாக இருந்தார்.

அந்த உளவாளி சம்பா மாவட்டம்  ஜெர்டா கிராமத்தில் , நடமாடுவது இந்திய ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அந்த உளவாளியின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. அவர் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் ராணுவம் செல்லும் இடம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவது தெரிந்தது.

அவரது நடவடிக்கைகள் பல நாட்கள் கண்காணிக்கப்பட்டு, அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.  அவரை கைது செய்யும் நடவடிக்கை  சம்பா மாவட்டம் ராம்கர் செக்டரில் மேற்கொள்ளப்பட்டது என சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு ஜோகிந்தர் சிங் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபரின் பெயர்  போத் ராஜ் என்பதாகும். அவர் ஜம்மு மாவட்டம் சண்கியா கிராமத்தில் இருந்து வந்தார்.

அந்த நபரை கண்காணித்த போது, அவர் ஜெர்டா கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அந்த கிராமம் சர்வ தேச எல்லை கோடு (ஐ.பி.)  பகுதியில் உள்ளதாகும். போலீசார் அதிக அளவில் அங்கு நடமாடியதைப்பார்த்து அந்த உளவாளி அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை விடாமல் துரத்தி கைது செய்தார்கள்.

அந்த உளவாளியை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து, இரண்டு பாகிஸ்தானிய சிம் கார்டுகள், இந்திய ராணுவ  நடமாட்டத்தை காட்டும் வரை  படம், இரண்டு மொபைல் போன்கள்  ஒரு மெமரி கார்டு  மற்றும் ரூ 1711 ஆகியவை கைப்பற்றப்பட்டன. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் , உள்ள நபர்களை பயன்படுத்தியே பாகிஸ்தான் அந்த மாநிலத்தில் பதட்டத்தை தூண்ட முயற்சிக்கிறது.  எல்லை வழியாக  வரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசும் உதவி அளித்து வருகிறது. தீவிரவாத்தினை துணை போகும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என  சர்வ நாடுகளிலும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்