முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தொழுகைகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருநின்றவூரிலுள்ள சிவ விஷ்ணு திருக்கோயிலில், விநாயக பெருமானுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருமங்கலம் வெல்கம் காலனியிலுள்ள C.S.I. நேசமேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட  அ.தி.மு.க. சார்பில், பெருமாச்சேரியில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயிலில் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்தும், தேர் இழுத்தும் கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், நன்மங்கலம் ஊராட்சிக் கழகம் சார்பில், ஆயிரத்து 68 பெண்கள் குத்து விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், பொன்விநாயகர் கோயிலில் இருந்து 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் முத்துராமலிங்க விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து அவர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், கழுகாசலமூர்த்தி கோயிலில், பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியக் கழகம் சார்பில், பருவதனஅள்ளி தர்காவில் சிறப்பு துவா நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சார்பில், அங்குள்ள மாரியம்மன் கோயிலில், பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சி அ.இ.அ.தி.மு.க சார்பில், கும்பத்து மாரியம்மன் கோயிலில், 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் ராசிபுரம் தொகுதி பிள்ளாநல்லூர் பேரூராட்சிக் கழக மகளிரணி சார்பில், மாரியம்மன் கோயிலில், 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீமங்களநாயமி சமேத ஸ்ரீவாஞ்சிநாத ஆலயத்தில், ஸ்ரீநவக்கிரக சாந்தி, ஸ்ரீதன்வந்திரி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் சக்ஸரநாம அர்ச்சனையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம் சார்பில், ஒலக்கோடு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி பொங்கல் வைத்து, கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. சார்பில், பாபநாசம் அருகே உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில், ஏராளமான பெண்களும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பகோணம் நகர 25-வது வார்டு சார்பில், ஸ்ரீதீபாஞ்சியம்மன் ஆலயத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை நகர கழக மாணவரணி சார்பில், ஐஸ்வர்யபிள்ளை மாரியம்மன் கோயிலில் ஆயிரத்து எட்டு அகல் விளக்கேற்றி கழகத்தினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருச்சியில் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.

வேலூர் மேற்கு மாவட்டக் கழக விவசாயப் பிரிவு சார்பில், ஆம்பூரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், குடியாத்தம் அருகே செதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

வேலூர் கிழக்கு மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய கழகம் சார்பில், ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் கோ பூஜையும், சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியக் கழகம் சார்பில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்கத்தேர் இழுத்தும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

பழனி மலைக்கோயிலில் தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சிறப்பு பூஜை செய்தும், தங்கத்தேர் இழுத்தும் கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், சக்திவேல் முருகன் கோயிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில், கள்ளக்குறிச்சி மந்தக்கரை பகுதியில் உள்ள மஸ்ஜிதேயா நசீப் பள்ளிவாசலில், மலர்போர்வை போர்த்தி சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் திருமருகள் ஒன்றிய கழகம் சார்பில், திருச்செட்டாங்குடி உத்திபுரிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதிசய விநயாகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மனமுருக வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்