முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 முகாம்கள் அழிக்கப்பட்டு ஏராளமான தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவ வாகனம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாரமுல்லா மாவட்டம் கனிஸ்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்துவதால், இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்