முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாரிசில் நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஐஎஸ் தீவிரவாதியிடம் பயிற்சி பெற்றதாக தமிழகத்தை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி ஹாஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற் காக நகை கடைகளில் சேர்ந்த தாகவும் அவர் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள், நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.

இந்நிலையில், கடந்த மாதம் தமிழகம், கேரளாவில் பதுங்கியுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து உளவுத்துறையினர் அளித்த தகவலை அடுத்து, மத்திய பாதுகாப்பு படை ஏஜன்சிகள், தமிழக போலீசாரின் உதவியுடன், திருநெல்வேலி அருகே, கடையநல்லூரில் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சுபஹானி ஹாஜா மொய்தீன் கைது செய்யப்பட்டார். இவர், கடந்தாண்டு ஏப்ரலில், சென்னையிலிருந்து துருக்கி சென்று அங்கு பாகிஸ்தான், ஆப்கன் நாடுகளை சேர்ந்த பிற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக் பகுதிக்கு சென்று அங்கு அப்டெலாமித் அபாவுட், சலா அப்தெஸ்லாம் ஆகிய பயங்கரவாதிகளை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் தான், பின்னர், பாரிசில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி, 100 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள். இவர்களில், அபாவுட், பிரான்ஸ் போலீசாரால் கொல்லப்பட்டான். அப்தெஸ்லாம், பிரான்ஸ் போலீசில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சுபஹானி குறித்து, டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு, என்.ஐ.ஏ.அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று, சுபஹானியிடம் விசாரணை நடத்துவர் எனத் தகவல்கள் கூறுகின்றன. பாரிஸ் குண்டு வெடிப்பு தொடர்பா சுபஹானியிடம் விசாரணை நடத்த பிரெஞ்ச் போலீஸ் வருகை தர உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பரபரப்புக்கு ஆளாகியுள்ள சுபஹானி மீது சமூக வலைதளங்கள் மூலம், ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது, இவர் நாடுமுழுவதும் பிற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, கேரளாவில் சில நீதிபதிகளையும், வெளிநாட்டு பயணிகளையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்பு முன் வைக்கப்பட்டன. தற்போது அவர், பிரான்ஸ் தாக்குதலில் தொடர்புடைய சர்வதேச பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததும், அவர்களிடம் பயிற்சி பெற்றதும் அம்பலமாகியுள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாத, பயங்கரவாத குழுக்களுக்கும் இடையேயான சர்வதேச தொடர்பு குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக நகை கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்