முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ் வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கம் இல்லை: முலாயம் சிங்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

லக்னா,  கட்சியின் மூத்த தலைவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்த மாநில முதல்வரும், தனது மகனுமான  அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்ணீர் விட்டு அழுதார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முலாயமின் மகனுமான அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவர் தற்போது கட்சியின் 4 மூத்த தலைவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் , சமாஜ் வாதி கட்சியில் புயல் வீசத்தொடங்கியுள்ளது.  அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் முலாயம் சிங் மிகவும் வேதனையில் ஆழ்ந்தார்.

இந்த நிலையில் , அகிலேஷ் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்ற யூகம் இருந்தது. இது குறித்து முலாயம் சிங்,  நேற்று மாநில தலைநகர் லக்னோவில் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது,  நாம் நமது பலவீனத்திற்கு எதிராக போராடுவதை விட்டு நமக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் விமர்சனத்தை எதிர் நோக்க முடியாத நபராக இல்லாத பட்சத்தில் தலைவராகவும் இருக்க முடியாது.

 அமர் சிங் அதிகம் உதவியுள்ளார். அமர் எனது சகோதரர். நான் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து காப்பாற்றியவர்  அமர் சிங் ஆவார். சிவ் பால் யாதவ் பணியையும் மறக்க முடியாது. நமது கட்சி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே நமது தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டிருக்க கூடாது. அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து நீக்கும் திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே நேரத்தில் , கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தனது சித்தப்பாவான சிவபால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டஇந்த  கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கண்ணீர் விட்டு கதறினார்.  நான் கட்சியின் வளச்சிக்காகவே  பாடுபடுகிறேன். எனது குடும்பத்திற்குள் சிலர் பிளவு ஏற்பட்டுத்த விரும்புகிறார்கள். நான் புதிய கட்சி துவங்கும் எண்ணம் இல்லை.  முலாயம் சிங் எனது தந்தை மட்டுமல்ல. அவர் எனது குருவும் ஆவார். அவர்தான் என்னை முதல்வராக ஆக்கினார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்