முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாடா நிறுவன தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி அதிரடி நீக்கம்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

மும்பை, டாடா சன்ஸ் நிறுவனத்தலைவர் பதவியில் இருந்து சைரஸ் பி.மிஸ்ட்ரி அதிரடியாக நீக்கப்பட்டார்.நிறுவனத்தின் புதிய தலைவராக, ரத்தன் என்.டாடா நியமிக்கப்பட்டார்.

மிஸ்ட்ரி நீக்கம் குறித்த முடிவை டாடா நிறுவன  நிர்வாக குழு உடனடியாக அறிவித்துள்ளது. நிறுவன நிர்வாக குழுவில், ரத்தன் டாடா, வேணு சீனிவாசன், அமித் சந்திரா சென், லார்ட் குமார் பட்டாச்சார்யா, ஆகியோர் உள்ளனர். பதவி நீக்கப்பட்ட மிஸ்ட்ரி  டாடா நிறுவனத்தின் 6வது தலைவர் ஆவார். அந்த நிறுவனத்தில் டாடா குடும்பத்தை சேராத இரண்டாவது தலைவர் அவர் ஆவார். இதற்கு முன்னர் நவ்ரோஜி சக்லாட்வாலா அந்த நிறுவனத்தின் டாடா குடும்பத்தை சாராத முதல் தலைவராக இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்