முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாவை ஊக்குவிக்க விசா நடைமுறைகளை எளிதாக்க மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

இந்தூர், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டுப்ப யணிகளுக்கான  விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பேசியதாவது:

வெளிநாட்டுப்  பயணிகளுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்தியா வரும் போது  விசா பெறுவதில் பல்வேறு சிரமங்களை அனுபவக்கின்றனர். இதனால் சுற்றுலா துறை  வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.  மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிக்கலான நடைமுறைகளை சந்திக்க வேண்டியிருப்பது கவலை அளிக்கும் அம்சமாகும். எனவே விசா பெறுவதில்  அவர்களுக்குள்ள பிரச்சனைகளை களைவதற்ககு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு  நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது.  எதிர் காலத்தில் இந்தியாவில் சுற்றுலா, வர்த்தகம், தொழில் உள்ளிட்டவற்றின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு விசா நடைமுறைகளை மேலும் எளிமைப் படுத்த முயற்ச்சிகள்  மேற்கொள்ளப்படும்.

கடந்த 2014 ம் ஆண்டு நவம்பரில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆன்லைன் விசா அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  நடப்பு ஆண்டில்  இத்திட்டத்தில் மேலும் 37 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்