முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர அரசு கட்டிடங்களை தெலுங்கானாவிடம் ஓப்படைக்க கவனரிடம் சந்திரசேகர ராவ் கோரிக்கை

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஆந்திர அரசு தனது தலைமைச்  செயலகதத்தை  அமராவதிக்கு மாற்றி விட்டதால், ஐதராபாத்தில்  உள்ள ஆந்திர தலைமைச் செயலக  கட்டிடம் முழுவதையும் தங்களிடம் ஓப்படைக்கும் மாறு கவனரிடம் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் கடந்த 2014ல் பிரிக்கப்பட்டு தெலுங்கானா  புதிய மாநிலம் உருவானது.  அப்போது கொண்டு வரப்பட்ட ஆந்திர மறு சீரமைப்புச் சட்டத்தின் படி, இரு மாநிலங்களுக்கும் தலைநகராக ஐதராபாத், 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி ஐதராபாத்தில் உள்ள ஆந்திர தலைமைச் செயலகக் கட்டிடத்தை இரண்டாக பிரித்து, இரு மாநில அரசு தலைமைச் செயலகங்களும் அங்கு செயல்பட்டு வந்தன.

அதன்பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவுக்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் மோதல் ஏற்பட்டது.  இதற்கிடையே ஆந்திராவின் புதிய தலைநகரைஅமராவதியில் உருவாக்கி வருகிறார் சந்திரபாபு நாயுடு. மேலும்  அமராவதியில் தற்காலிக தலைமைச் செயலக கட்டிடத்தையும் கட்டி முடித்தார்.  கடந்த மாதம் ஆந்திர தலைமைச் செயலகம் முழுவதுமாக அங்கு இடம் பெயர்ந்தது.  இந்நிலையில் ஐதராபாத்தில் இரு மாநில கவர்னரான நரசிம்மனை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.

அப்போது தனது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளித்தார். அதில் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகம், சட்டசபை,  மேலவைக் கட்டிடங்கள் முழுவதையும்  தெலுங்கானா  மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.. இது பற்றி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசித்த பின்பு முடிவெடுப்பாதாக ராவிடம் கவர்னர் உறுதியளித்தார். இதற்கிடையே இந்த விசயத்தில்  சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையை கூட்டி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்