முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து உருவாகும் தீவிரவாதம்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

மனாமா, பாகிஸ்தானில் இருந்து உருவெடுக்கும் தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் பகரைன் அரசிடம் தெரிவித்தார். தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநில பதட்ட நிலைக்கு  எல்லை வழியாக பாகிஸ்தான் தூண்டி விடும் தீவிரவாத நடவடிக்கைகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜ் நாத் சிங் 3 நாள் பயணமாக இந்த வளை குடா நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் நிகழ்ச்சியாக அவர் நேற்று பகரைனில் உள்ள பனாமாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர்  ரஷீத்  பின் அப்துல்லாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது பாகிஸ்தானில் இருந்து உருவெடுக்கும் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது குறித்து  தெரிவித்தார். இதனை சாதாரணமாக கருத  ஆபத்தை விளைவிக்கும் இதற்கு . மிகவும்  தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் பகரைன் முக்கிய உறுப்பினர் ஆகும். அந்த அமைப்பில்  பாகிஸ்தானும் உறுப்பிராக உள்ளது.

 காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தீவிரவாதி  கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து கடந்த 3 மாதமாக பிரிவினை வாதிகள் காஷ்மீரில் போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி வருகிறார்கள்.  இந்த வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் ஆதரவுடனேயே நடக்கின்றன.  கொல்லப்பட்ட தீவிரவாதி புர்கான் வானி தியாகி என்றும் அவரது இறப்பு  தினத்தை கறுப்பு நாளாக அனுசரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.

தீவிரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானின் இந்த செயல்பாட்டையே இந்தியா தற்போது பகரைன் நாட்டிடம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்