முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா - ஆந்திரா மாநில எல்லையில் 24 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம், ஒடிசா -  ஆந்திரா மாநில எல்லையில்  தடை செய்யப்பட்ட  மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இயக்கத்தை சேர்ந்த 24 தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒடிசாவின் மால்கன் கிரி மாவட்டத்தில் நடந்த இரு மாநில போலீசார் நடத்திய கூட்டு என்கவுன்ட்டரில் இந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மிக அதிக அளவிலான உயிரிழப்பு தற்போதைய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் 13 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகபட்சமாக கொல்லப்பட்டிருந்தனர்.

ஒடிசா மாநிலம், ஆந்திராவின் எல்லையோரத்தின்  மால்கன்கிரி மாவட்டத்துக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) ஒடிசா - ஆந்திரா போலீசார் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல்நடத்தினார்கள். இந்த கூட்டு தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் அதிக அளவி ல் கொல்லப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

போலீசாரை கண்டதும் காட்டு பகுதிக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுடத்துவங்கினர். போலீசாரும் அதிரடியாக செயல்பட்டு தீவிரவாதிகளை நோக்கி திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 24 மவோயிஸ்ட்டுகள் ரத்தவெள்ளத்தில் பலியாயினர். என்கவுன்ட்டர் ஒன்றில் அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாவது இதுவே முதல்முறையாகும்.

சுட்டுக்கொல்லப்பட்ட  தீவிரவாதிகள் மீதான என்கவுன்ட்டர் நடந்த இடம் ஆந்திராவை நோக்கி செல்லும் சாலை பகுதியாகும். இந்த என்கவுன்ட்டரில் இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 17 ஆண் தீவிரவாதிகளும், ஏழு பெண் தீவிரவாதிகளும் பலியாயினர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் காட்டுப்பகுதி பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு இரு மாநில போலீசார் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தினர். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள், 3 எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் மற்றும் இதர வகை துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.

தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தாக்குதல் நடந்த இடம் பெஜ்ஜிங் என்ற காட்டுப்பகுதியாகும். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் ஒடிசாவின் சித்ர கொண்டாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் போலீஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் அவர்களின் உயருக்கு ஆபத்து ஏதும் இல்லை. மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 2-வது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னர், 2013-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஒடிசாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்