முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம் பெண்கள் வாழ்க்கையை 'தலாக்' சீரழிப்பதை அனுமதிக்கமாட்டோம் : பிரதமர் மோடி திட்டவட்டம்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

மஹோபா  - மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையினால் முஸ்லிம் பெண்கள் சீரழிவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  அதேவேளையில், பெண் குழந்தைக்கு எதிரான இந்துக்களின் விரோதப் போக்கையும் கண்டிப்பதாக கூறினார். மேலும் "பெண் சிசுக் கொலை என்பது படுபாதகப் பாவச்செயல். பாவம் செய்பவர் இந்து என்பதற்காக விட்டு விட முடியுமா? எனது அரசு பெண் சிசுக்கொலைக்கு எதிராக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகள்கள், தாய்மார்கள், சகோதரிகளின் உயிர்கள் காக்கப்பட வேண்டும்" என்று உத்தரப் ப்பிரதேச மாநில பந்தேல்கன்ட் பகுதியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, "இங்கு மதம் என்பதைப் பார்க்கக் கூடாது. தாய்மார்கள், சகோதரிகள் மதிக்கப்பட வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தை உறுதியாக எழுப்பியுள்ளோம். இப்போது இந்த தலாக் விவகாரம் எழுந்துள்ளது. எப்படி பெண் சிசுக்கொலையில் ஈடுபடும் இந்து சிறைக்குச் செல்வது தகுதியோ அப்படிப்பட்டதுதான் தொலைபேசியில் தலாக் சொல்லி எனது முஸ்லிம் சகோதரிகளின் வாழ்வை சீரழிப்பதும். தொலைக்காட்சி சேனல்கள் மும்முறை தலாக் கூறும் விவகாரத்தை இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவோ, பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் போக்காகவோ சித்தரித்தல் கூடாது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள மனுவில் பெண்கள் மீதான வன்முறை கூடாது என்றும் மதத்தின் பெயரால் பாகுபாடு கூடாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

ஜனநாயகத்தில் உரையாடலும் விவாதமும் இருக்க வேண்டும். அரசு தன் நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. மும்முறை தலாக் நடைமுறையினால் முஸ்லிம் பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படக் கூடாது. நாம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை காப்பதா வேண்டாமா? அவர்களுக்கும் சமத்துவ உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? (கூட்டத்தினரை நோக்கி மோடி) நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக பெண்களுக்கு அநீதி இழைப்பதில் குறியாக இருக்கின்றன. இது என்ன நீதி? அரசியலும், தேர்தல்களும் இருக்கின்றன மறுக்கவில்லை, ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு அரசமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தருவது எந்த ஒரு அரசின் கடமையாகும். இது மக்களின் கடமையும் கூட" என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்