முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடி விபத்துக்களை தடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, வெடி விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுரை வழங்கினார்.

விருதுநகர், சிவகாசி மற்றும் இதர பகுதிகளில் நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை மற்றும் இதர வெடி விபத்துகள் குறித்து விவாதித்து இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் பணித் திறனாய்வு கூட்டம் நடந்தது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு செயலாளர் அமுதா முன்னிலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குனர் போஸ்-சுடன் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சட்ட விதிமீறல் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் உற்பத்தி செய்ய 3 சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர் நடமாடும் கண்காணிப்பு குழு மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான பயிற்சி மையத்தில் மேற்பார்வையாளர்கள், போர்மேன்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களும் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தி மேற்கொள்ள விரும்புகின்றனர்.  மேலும் துறை சம்மந்தமான இதர முக்கிய பணிகள் குறித்து திறனாய்வு செய்து, துறையின் பணியினை தொழிலாளர்கள் பயனடையுமாறு துரிதப்படுத்த தொழிலாளர் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்