முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் : தேவர் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தேவர் ஜெயந்தியையொட்டி, முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம், மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பசும்பொன்னில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு அணிவிக்கப்பட்டது.  விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தேசபக்தருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30-ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுவது வழக்கம். அக்டோபர் 28-ம் தேதி ஆன்மிக விழாவும், 29-ம் தேதி அரசியல் விழாவும், 30-ம் தேதி குருபூஜை விழாவும் நடத்தப்படும். இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்தநாள் விழாவும், 54-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க சார்பில், முதல்வர் ஜெயலலிதா, தேவரின் திருவுருவச் சிலைக்கு வழங்கிய பதிமூன்றரை கிலோ எடையுள்ள தங்கக் கவசம், நேற்று மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் பசும்பொன்னிற்கு கொண்டு செல்வதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கினார். பின்னர், காவல்துறை பாதுகாப்புடன் தங்கக்கவசம் பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ,  ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக்கழகச் செயலாளர் ராஜன்செல்லப்பா மற்றும் கழக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பசும்பொன் கொண்டு வரப்பட்ட தங்கக்கவசம், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பூஜை செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  பசும்பொன் நினைவிடத்தில், வரும் 31ம் தேதி வரை தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு இந்த தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago