முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு 10 மணி முதல் பட்டாசு வெடிக்கக் கூடாது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 29-ம் தேதி வருகிறது. இதனையொட்டி பட்டாசு விற்பனை கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது. பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசுவின் அளவு அதிகரித்தாலும் தீபாவளியின் சந்தோஷமே பட்டாசு தான் என்பதால் பெரும்பாலானவர்கள் அதனைக் கண்டு கொள்வதில்லை.இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பது குறித்த சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதைக் கீழே பார்ப்போம்.

*125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்கக் கூடாது.
*நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி, விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக் கூடாது.
*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
மேலும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாசுக்கட்டுபாட்டு வாரியம், ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம் என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்