முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் பாக். படைகள்: ரஜோரி பகுதியில் முன்னெச்சரிக்கை கருதி பள்ளிகள் மூடல்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ரஜோரியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டுப் படைகள் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. பூஞ்ச், உரி போன்ற எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், ஏற்கெனவே எல்லையோர கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை கருதி தற்போது பள்ளிகளும் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அதிகமாக இருப்பதால், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அனைத்து பள்ளிகளும் நேற்று மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு அருகிலேயே பீரங்கி குண்டுகள் வந்து விழுவதால், குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் வந்துவிழும் பீரங்கி குண்டுகளை அப்பகுதி மக்கள் சேகரித்துள்ளனர். அங்கு முன்னெச்சரிக்கை கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதிலும், குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாகிஸ்தானுக்கு எதிராக கருப்பு தினத்தை கடைபிடிக்கும் வகையில், மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்