முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகை: அரசு பஸ்களில் பயணம் செய்ய 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஆன்லைனில் முன்பதிவு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்களில் வெளியூர் செல்ல 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை ( 26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 30 மற்றும் 31-ந்தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) பூந்தமல்லி, அண்ணாநகர் மேற்கு, பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணையம் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து மொத்தம் 11,245 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்து 64 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.  இன்று ( புதன்கிழமை) 3,254 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு செல்கின்றன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. கோயம்பேடு, தாம்பரம், சாணடோரியம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் 29 முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

தற்காலிக பஸ் நிலையங்களில் மக்கள் பஸ் ஏறுவதற்கு வசதியாக போக்குவரத்து கழகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. வழக்கமாக அரசு பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் பொதுமக்கள் சிறப்பு பஸ்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய பொது மக்களிடம் அதிக ஆர்வம் காணப்பட்டது. ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் முதல் நாளில் (நேற்றுமுன் தீனம் ) ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 526 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை பயணம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 18,611 பேரும் (சென்னையில் இருந்து 12548), 27 ந்தேதி 45,860 பேரும், (சென்னை பயணிகள் 32701), 28-ந் தேதி 37,163 பேரும் (சென்னை பயணிகள் 24,631) முன்பதிவு செய்துள்ளனர்.பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து 30ந் தேதி சென்னை திரும்ப 32,675 பயணிகள் 31-ந் தேதி 23,288 பேரும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.அரசு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய ஒரே நாளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 597 பேர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடர்ந்து இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஆன்லைனில் முன்பதிவை சில ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். நாளுக்கு நாள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.  பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 044- 24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago