முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி திருநாளின் போது, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தமாக 11225 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் பேருந்துகள் இயக்கப்படும். 2275 பேருந்துக்களுடன் கூடுதலாக 26.10.2016 அன்று 979 சிறப்புப் பேருந்துகள், 27.10.2016 அன்று 1717 சிறப்புப் பேருந்துகள், 28.10.2016 அன்று 1704 சிறப்புப் பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 4400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆக ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து 11225 பேருந்துகள் இயக்கப்படும்.

* மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 26.10.2016 அன்று 2507 சிறப்புப் பேருந்துகள், 27.10.2016 அன்று 3488 சிறப்புப் பேருந்துகள், 28.10.2016 அன்று 4069 சிறப்புப் பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை 10,064 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

* செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு)-ல் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். நாள் ஒன்றுக்கு 240 பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 720 பேருந்துகள் இயக்கப்படும்.

* கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். 26.10.2016 அன்று 186 பேருந்துகள், 27.10.2016 அன்று 194 பேருந்துகள், 28.10.2016 அன்று 194 பேருந்து கள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 574 பேருந்துகள் இயக்கப்படும்.

* திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் (எஸ்.இ.டி.சி. உள்பட), தாம்பரம் சாணடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்)-ல் இருந்து புறப்படும். 26.10.2016 அன்று 193 பேருந்துகள் 27.10.2016 அன்று 230 பேருந்துகள், 28.10.2016 அன்று 230 பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 653 பேருந்துகள் இயக்கப்படும்.

* பூவிருந்தவல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். 26.10.2016 அன்று 402 பேருந்துகள், 27.10.2016 அன்று 494 பேருந்துகள், 28.10.2016 அன்று 494 பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 1390 பேருந்துகள் இயக்கப்படும்.

* மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, சங்கானாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாக்குமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். 26.10.2016 அன்று 2233 பேருந்துகள், 27.10.2016 அன்று 2834 பேருந்துகள், 28.10.2016 அன்று 2821 பேருந்துகள் என 26.10.2016 முதல் 28.10.2016 வரை மொத்தம் 7888 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து மொத்தம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அன்றாடம் இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து இன்று முதல் 28.10.2016 வரை 11,225 பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்