முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமுதம் நியாய விலை கடையில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை,  சென்னை லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உள்ள அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருள்கள் நகர்வு செய்து முடிக்கப்பட வேண்டுமென்ற முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன என்பதையும், ஆய்வின்போது அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதையும் அமைச்சர் உறுதி செய்தார்.

ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்கள் அமைச்சரிடம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருள்கள் தரமாகவும், சரியான எடையிலும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பெற்றுக்கொள்வதற்கு ஆணையிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர். ஆதார் அட்டை பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், இதற்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை (தெற்கு) மண்டல மேலாளர் பாண்டியன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்