முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலேஷ்க்கு நெருக்கமான அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம், சிவ்பால் யாதவ் நடவடிக்கை

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ,  உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு  நெருக்கமான அமைச்சரை  சமாஜ் வாதி கட்சியில் இருந்து கட்சியின் மாநில தலைவர்  சிவ்பால் யாதவ்  நீக்கினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முலாயம் சிங்கின் சமாஜ் வாதி கட்சி ஆட்சி உள்ளது. அந்த கட்சியின் தலைவராக முலாயமின் தம்பி சிவ்பால் யாதவ் உள்ளார். அவருக்கும் முலயாமின் மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

 இந்த மோதல் வெளி நிகழ்ச்சிகளிலும் வெடித்தது. இதனால் சமாஜ் வாதி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டால் தேர்தலில் தோல்வியை தழுவ நேரிடும் என கட்சி நிர்வாகிகளை எச்சரித்த முலாயம் சிங் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனால் கட்சி ஒன்று பட்டதைப்போல ஓரிரு நாட்களுக்கு காணப்பட்டது. ஆனால், அந்த கட்சியில் மோதல் கடுமையாக  அதிகரித்து இருப்பது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் சிவ் பால் யாதவ்  முதல்வர் அகிலேஷீக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்  தேஜ் நாராயண் பாண்டே என்ற பவான் பாண்டேவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார்.

 அமைச்சர்  அமைச்சர் பாண்டே  முதல்வர் அலுவலகத்தில் அநாகரிமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சரவையில்  இருந்து நீக்குமாறும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என மாநில கட்சி தலைவர் சிவ் பால் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பாண்டே திங்கட் கிழமையன்று நடந்த கட்சி கூட்டத்தில் எம்.எல்.சி. அஷீ மாலிக்குடன் மோதினார். அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு பாண்டேவுக்கும், முதல்வர்  அகிலேஷ் யாதவுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முதல்வர் அலுவலகத்தில் அமைச்சர் பாண்டே தன்னை கன்னத்தில் அடித்ததாக  அஷீ மாலிக் குற்றம் சாட்டினார். அதேப்போன்று மாலிக்கும் தன்னை தாக்கியதாக பாண்டே குற்றம் சுமத்தி இருந்தார். கட்சியும் , குடும்பமும் ஒற்றுமையாக உள்ளது என சமாஜ் வாதி கட்சி  நிறுவனர் முலாயம் சிங் கூறிய மறு நாள் அமைச்சர் பாண்டே நீக்கம் பற்றிய தகவலை சிவ் பால் யாதவ்  வெளியிட்டுள்ளார்.
 அகிலேஷ் யாதவை அவுரங்க சீப்பாகவும் , முலாயம் சிங்கை  ஷாஜகானாகவும்  ஒப்புமை காட்டி ஒரு ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அது குறித்து விளக்கம் கேட்க அகிலேஷ் யாதவ் எம்.எல்.சி.மாலிக்கை அழைத்திருந்தார். அப்போது அவர் மீது அமைச்சர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago