முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி-துணை ஜனாதிபதி சம்பளத்தை 3 மடங்காக அதிகரிக்க முடிவு

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் சம்பளத்தை  3மடங்காக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது  7வது சம்பள குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களின் சம்பளம் ஜனாதிபதியின் சம்பளத்தை விட அதிகமாக உள்ளது.

இதனைக்கருத்தில் கொண்டு, தற்போது நாட்டின் உயர் பதவியில் உள்ள இந்த தலைவர்களுக்கும் சம்பளத்தினை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தற்போதைய மாத சம்பளம் ரூ.1.50 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சமாகவும், கவர்னர்களின் சம்பளம் ரூ  1 லட்சமாகவும் உள்ளது.

7வது சம்பள குழு பரிந்துரைக்கு பின்னர்  கேபினட் செயலாளர் சம்பளம்  ரூ2.5லட்சமாகவும் மத்திய அரசின் செயலாளர் சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ 2.25லட்சமாகவும் உள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனாதிபதியின் சம்பளத்தை விட ரூ.1 வட்சம் கூடுதலாக உள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் சம்பளம் கடந்த 2008ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது அவர்களின் சம்பளத்தை  3 மடங்கு  உயர்த்த பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்