முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

 நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ  பிரதமர் மோடியுடன் டெல்லியில் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம்,  பாதுகாப்பு, துறைகளில் உறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உள்பட 3 ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே கையெழுத்தானது.

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ நேற்று டெல்லி வந்தார். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் . அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் உறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு,வரிஏய்ப்பை தடுப்பது  உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இரு தரப்பு இடையே கையெழுத்தானது.

பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஜான் கீயுடன் பிரதமர்  மோடி கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அணு விநியோக குழுவில்(என்.எஸ்.ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு நியூசிலாந்து முழு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு  நான் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ க்கு நன்றி தெரிவிக்கிறேன் .

 நாங்கள் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை , பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விஷயங்களில் இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

 என்.எஸ்.ஜி   குழுவில் இந்தியா உறுப்பினராவது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.  இது குறித்து என்.எஸ்.ஜி  உறுப்பினர்கள் நல்ல முடிவை எடுப்பதற்கு  நியூசிலாந்து செயல்படும். என்.எஸ்.ஜியில் இந்தியா உறுப்பினராக ஆவதன் முக்கியத்துவத்தை நியூசிலாந்து உணர்ந்துள்ளது.
இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ தெரிவித்தார்.

தென் கொரியாவில் என்.எஸ்.ஜி குழுவில் உறுப்பினராக உள்ள 48 நாடுகளின் தலைவர்களின்  கூட்டம் நடந்த போது இந்தியாவிற்கு அமெரிக்கா தீவிர ஆதரவு அளித்தது. ஆனால் இந்த குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடாக உள்ள இந்தியாவை என்.எஸ்.ஜி குழுவில் சேர்க்கக்கூடாது என சீனா கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.இதனால் இந்தியா இந்த குழுவில் உறுப்பினராக முடியாமல் உள்ளது. இருப்பினும் நாட்டின் எரி சக்தி துறைக்கு அதிகம் தேவைப்படும் அணு பொருட்களை பெற என்.எஸ்.ஜி குழுவில் சேர அனைத்து நாடுகளின் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்