முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ..பி. முதல்வர் அகிலேஷ் கவர்னரை சந்தித்தார்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாதி கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவின் நெருக்கமான நபர் கட்சியில் இருந்து நீக்கப்ப்பட்ட சில மணி நேரத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கவர்னர் ராம்நாயக்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து, கவர்னர் மாளிகை தரப்பு கூறுகையில், முதல்வர் அகிலேஷ் யாதவ்-கவர்னர் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். இந்த  சந்திப்பு 15  நிமிடம் நடந்தது.தீபாவளியை யொட்டி முதல்வர் அகிலேஷ் யாதவ் கவர்னருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என கூறியது. உத்தரப்பிரதேச அரசில் தற்போது நான்கு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. தனது சித்தப்பா சிவ்பால் யாதவ், ஓம் பிரகாஷ் சிங், நராட் ராய், சயீதா சகா தாப் பாத்திமா ஆகியோரை அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

இந்த நிலையில், நேற்று சமாஜ் வாதியின் மாநில தலைவர் சிவ்பால் யாதவ் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும் முதல்வருக்கு நெருக்கமானவராகவும் உள்ள பவான் பாண்டேவை  கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார். இதனால் சமாஜ் வாதி அரசில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை கேட்பதற்காகவே கவர்னர் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்