முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் - சி.ஆர்.சரஸ்வதி தகவல்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நன்றாகப் பேசி வருகிறார் என்றும், முதல்வரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல்வர் மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்பி, தமது வழக்கமான மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.  சிறப்பான சிகிச்சைகளைத் தொடர்ந்து, முதல்வர் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நன்றாகப் பேசி வருகிறார் என அப்போலோ மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

முதல்வர், மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்பி, தமது வழக்கமான மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்