முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் நேற்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக, நேற்று 979 சிறப்பு பேருந்துகள், இன்று, ஆயிரத்து 717 சிறப்பு பேருந்துகள், நாளை, ஆயிரத்து 704 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களிலும் 11,225 சிறப்புப் பேருந்துகள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. மாநிலத்தின் பிற ஊர்களிலிருந்து நேற்று, 2,507 சிறப்பு பேருந்துகள், இன்று, 3,488 சிறப்பு பேருந்துகள், நாளை, 4,069 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களில் 10,064 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, அண்ணாநகர் மேற்கு - கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே, நூறடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையம் - தாம்பரம் சானடோரியம் - பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், வரும் 30-ம் தேதி முதல், நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் இதே எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும் அண்ணா நகர் மேற்கில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய பேருந்துநிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்துகள், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் கோயம்பேடு சென்று பேருந்தை பிடிக்கவேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டிருப்பதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால் ஏராளமானோர் அங்கிருந்தே சொந்த ஊர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.  இதேபோல் மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், கோவை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதலே ஏராளமான பயணிகள் சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டநெரிசல் தவிர்க்கப்பட்டிருப்பதை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago