முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

ரோம்  - இத்தாலியின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை 5.4 மற்றும் 6.1 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவாகியுள்ளன.  இவ்விரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த புதன்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்டது. சில இடங்களில் வீடுகள், தேவாலயங்கள் சரிந்தன. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மேயர்கள் கூறியபோது, "அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் இத்தாலியின் மத்தியப் பகுதிகளில் சில வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 247 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago