முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவண மோசடி வழக்கில் உலக புகழ்பெற்ற 'ஆப்கன் பெண்' கைது

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

பெஷாவர்  - நேஷனல் ஜியாகிராஃபிக் இதழின் முகப்புப் பக்கத்தில் இடப்பெற்றதன் மூலம் உலக பிரபலம் அடைந்த 'ஆப்கன் பெண்' பாகிஸ்தானில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.  போலியான ஆவணங்களின் மூலம் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் போலியான அடையாள அட்டையை பெற்று பாகிஸ்தானில் தங்கியதாக 'ஆப்கன் பெண்' ஷர்பத் குலா (46) மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷர்பத் குலா மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தக் குற்றத்துக்காக ஷர்பத் குலாமுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.  1979 ஆம் ஆண்டு ஆப்கனை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது பெரும்பாலான மக்கள் பாகிஸ்தான் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர். அவ்வாறு முகாம்களில் தங்கியிருந்தவர்களில் கவலையும், விரக்தியும் கலந்த முகத்துடன் பச்சைநிறக் கண்களோடு காணப்பட்ட ஷர்பத் குலா(12) என்ற சிறுமியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸ்டீவ் மெக்கரி புகைப்படம் எடுத்தார். அதன்பின் அந்தப் புகைப்படம் நேஷனல் ஜியாகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்து 'ஆப்கன் பெண்' என்று உலக புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago