முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மீதான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - காஷ்மீர் மீதான பிரிட்டன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அந்நாட்டு பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 6-ம் தேதி பிரிட்டன் பிரதமர் தெரசா மே இந்தியா வருகிறார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருவது இது முதல்முறையாகும். இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமருடனான வாராந்திர கேள்வி நிகழ்வின்போது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. யாஸ்மின் குரேஷி, "இந்திய பயணத்தின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவீர்களா?" என்றார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் தெரசா மே, "காஷ்மீர் மீதான பிரிட்டன் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இருநாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவுமே தீர்வு காண முடியும். எனவே, எனது இந்திய பயணத்தின்போது காஷ்மீர் குறித்து பேசப்போவதில்லை" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். நவம்பர் 6 முதல் 8-ம் தேதிவரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியை அவர் சந்திக்கவிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்