முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் கீரையை பயிரிட்டு: நாசா விஞ்ஞானிகள் புதிய ஆய்வு

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - சர்வதேச விண்வெளி நிலையத் தில் இலைகோஸ் கீரை வகையை பயிரிட்டு நாசா விஞ்ஞானிகள் புதிய ஆய்வை தொடங்கி யுள்ளனர்.  பருவத்துக்கு ஏற்றபடி பூமியில் உள்ள விவசாயிகள் வேளாண் நிலங்களில் பயிரிடுகின்றனர். அதுபோல விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் இலைகோஸ் கீரை வகையை பயிரிட்டுள்ளனர். நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ இந்த ஆய்வை தொடங்கி வைத்தார். விண் வெளியில் உள்ள வீரர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் வகையில் பயிர் வளர்ப்பு முறைகள் மிகவும் அவசிய மானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நாசாவின் காய்கறி திட்ட மேலாளர் நிக்கோல் டபோர் கூறியபோது, ‘‘பயிரிடும் பணிகள் சிறப்பாக நடந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட பணிகள் சிறிது மந்தமாகவே நடந்தன. எனினும் அனைத்து செடிகளும் வெற்றிகரமாக பயிரிடப்பட்டன. இந்த கீரை வகைகள் வளர குறைந்தபட்சம் 4 வாரங்கள் பிடிக்கும்.

அதன்பின் அதனை அறுவடை செய்வோம்’’ என்றார். இந்த செடிகளுக்கு தேவையான அளவுக்கு உரங்கள் இட்டு ஏற்கெனவே குறிப்பிட்ட அளவுக்கு வளர்க்கப்பட்டு இருக்கும். இதனால் விண்வெளியில் இந்த செடிகளை வெறுமனே நட்டு வைத்து சிறிது தண்ணீர் ஊற்றினாலே போதும் வேகமாக வளர்ந்து விடும்.

எதிர்காலத்தில் செவ்வாய் கிரக ஆய்வுக்காக மனிதர்கள் செல்லும்போது, அங்கு ஏற்படும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விண்வெளி யில் பயிர்கள் விளைவிக்கும் ஆராய்ச்சி நடந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்