முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பேருந்துகளில் வசூலித்த கூடுதல் கட்டணத்தை பயணிகளிடமே திருப்பித்தர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கூடுதலாக பெற்றிருந்தால், அதனை பயணிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:-

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால உத்தரவுகளை வழங்கியுள்ளது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரையில், ஆம்னி பேருந்து பேருந்துகள் அனைத்தும் நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிவித்த கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தக் கூடாது. பண்டிகை இல்லாத காலத்தில் (அக்டோபர் 26-க்கு முன்பும், நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகும்) ஆம்னி பேருந்து இயக்குநர்கள் நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். எந்தவகையிலும் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

அக்டோபர் 27 முதல் 31 வரையிலான பயணிகளிடம் இருந்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கூடுதலாக கட்டணம் எதையேனும் வசூலித்திருந்தால் அதனை பயணத்தின் போது, பயணிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இத்தகைய நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறையும், மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் உரிய முறையில் பின்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும். அதில் எந்த மாறுபாடும் இருக்கக் கூடாது. இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்