முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒருநாள் போட்டி: அதிக ரன்கள் விட்டுகொடுத்ததே தோல்விக்கு காரணம் - டோனி

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைப்பெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தோல்வி குறித்து டோனி தெரிவிக்கையில், அதிக ரன்கள் விட்டுகொடுத்ததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில்  நியூசிலாந்து வீழ்த்தியது.

ராஞ்சி மைதானத்தில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இது தான். இதற்கு முன்பு இங்கு ஆடியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி கண்டிருந்தது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ‘முதல் 10 ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். அத்துடன் எக்ஸ்டிரா வகையிலும் (13 வைடு உள்பட 16 ரன்) நிறைய ரன்கள் போனது பின்னடைவாகும்.

கைவசம் விக்கெட் இருந்த நிலையில், இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். பிற்பகலில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் காணப்பட்டது. ஆனால் போக போக ஆடுகளத்தில் வேகம் இல்லை. இதே போல் மின்னொளியில் புதிய பந்து பேட்டுக்கு ஏதுவாக வந்தது. ஆனால் அது பழசான பிறகு ரன் குவிக்க கடினமாகிவிட்டது. 5, 6-வது பேட்டிங் வரிசையில் விளையாடியவர்கள் புதியவர்கள். அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். கடைசி கட்ட வீரர்கள் கணிசமாக ரன்கள் எடுத்தது நல்ல விஷயமாகும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்