முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வரும் 19-ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தின் 3 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரம் வருமாறு:
தஞ்சாவூர் - எம்.ரங்கசாமி:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ரங்கசாமி (60). இவருக்கு மனைவி இந்திரா, மகன்கள் மனோபாரத், வினோ பாரத் ஆகியோர் உள்ளனர். பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ள ரங்கசாமி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். 2011-ல் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர்.

அரவக்குறிச்சி - வி.செந்தில் பாலாஜி:
அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர். பி.காம். படித்துள்ளார். தந்தை வேலுசாமி, தாய் பழனியம்மாள், மனைவி மேகலா, மகள் நந்தினி. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம்.ரங்கசாமி, வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்:
கல்வித் தகுதி- எம்.ஏ (அரசியல்) மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2006-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 1972-ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக இருந்துவரும் இவர், 2003 முதல் 2006-ம் ஆண்டு வரை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு மீண்டும் 6 மாதம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.

இதேபோல நேற்று மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. வாசன் தலைமையிலாள த.மா.கா. இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago