முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, ஆப்கனுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்  - ஆப்கானிஸ்தானில் உள் நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. இதேபோல இந்தியாவுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது.
இதை மறைமுகமாகக் குறிப் பிட்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் அறிவுரை கூறியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:  பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் போலீஸ் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக் குதலை வன்மையாகக் கண்டிக் கிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்.

பாகிஸ்தானில் மண்ணில் முகா மிட்டு அண்டை நாடுகளுக்கு (இந்தியா, ஆப்கானிஸ்தான்) எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை அந்த நாட்டு அரசு அழிக்க வேண்டும். பாகிஸ் தானில் ஜனநாயக ஆட்சி நீடித் திருக்க அமெரிக்கா விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்