முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றி பாகிஸ்தான் அடாவடி : இந்தியா கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத்  -  இந்தியாவில் உளவு பார்த்த பாகிஸ்தான் தூதராக அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. இந்த முடிவு எடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியா உள்ள ஒருவரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது. பாகிஸ்தானின் இந்தஅடாவடி நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில்  உதவி தனி நபர் மற்றும்  நல வாழ்வு அதிகாரியாக  ஸ்ரீசுர்ஜித் சிங் இருந்தார்.  அந்த அதிகாரியை பாகிஸ்தான் காரணமின்றி வெளியேற்றியுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக இருந்தவர் மெகமூது அக்தர் . அவர் இந்திய ராணுவம் குறித்து உளவு பார்த்து தகவல்கள் சேகரித்த இரு நபர்களிடம் தொடர்பு வைத்திருந்தார். அந்த நபர்களிடம் இருந்து தகவல்களை அவர் பெற்று வந்தார். அவரது  இந்த சதி வேலையை கண்டு பிடித்த இந்தியா நேற்று முன்தினம்(அக்.27) நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த நடவடிக்கைக்கு  பதிலளிப்பதாக பாகிஸ்தான் அடாவடியாக அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஸ்ரீசுர்ஜித்தை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இதற்கு எந்த காரணத்தையும் அந்த நாடு தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago