முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி 2 நாள் ஜப்பான் பயணம்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -  பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு வருகிற நவம்பர் மாதம் 11 ந்தேதி முதல் இரு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
பிரதமர் மோடி வருகிற நவம்பர் மாதம் ஜப்பான் செல்லும் போது அந்த நாட்டு மன்னரை சந்திக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த நாட்டு பிரதமர் சின்சோ அபேவுடன் அவர் வருடாந்திர  பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது இந்தியா-ஐப்பான் இடையே  மக்கள் பயன் பாட்டுக்கான அணு சக்தி ஒப்பந்தம் நிறை வேறும்.

பிரதமர் மோடியின் ஜப்பான் பயண விவரத்தை   வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அணு சக்தி ஒப்பந்தத்தை தவிர இரு நாடுகளும் உயர் தொழில் நுட்பம்,  வர்த்தகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு துறைகளில் உறவை மேம்படுத்த ஆலோசனை நடத்தும்.அணு ஆயுதத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான் ஆகும். அந்த நாடு, இந்தியாவின் மக்கள் பயன்பாட்டுக்கான அணு சக்தியை அளிக்கிறது.இதற்கு முன்னர் பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் ஜப்பானுக்கு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்