முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரூக் அப்துல்லா பிரதமர் மோடியுடன் சந்திப்பு : காஷ்மீர் பேச்சு வார்த்தைக்கு வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது   காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து பிரிவினை வாதிகள் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. கடந்த 112 நாட்களாக காஷ்மீரில் பிரிவினை வாதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு பாகிஸ்தானும் துணை போகிறது. காஷ்மீரில் அமைதி நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் , தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில் அதில் தொடர்புடைய அனைவரையும் அழைக்க வேண்டும் என பரூக் அப்துல்லா கூறினார்.கடந்த 3 மாதமாக காஷ்மீர் பிரச்சினை காரணமாக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பிரதமருடன் மேலும் பேசிய விவரங்களை பரூக் அப்துல்லா தெரிவிக்க மறுத்தார்.இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது என அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago