முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிந்தார் கவுதமி

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக கமலுடன் குடும்பம் நடத்திய நடிகை கவுதமி தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்.

நடிகை கவுதமி கமலஹாசனுடன் கடந்த 13 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார். கடைசியாக அவர்கள் இருவரும் ‘பாபநாசம்’ படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். அண்மையில் அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அரசல் புரசலாக பேசப்பட்டன. சமூக வலை தளங்களிலும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் நடிகை கவுதமி தன்னுடைய பிளாக்கிலும், டுவிட்டரிலும் கமலை விட்டு பிரிந்து விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டதாகவும், வருத்தம் தரக்கூடிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தான் தள்ளப்பட்டதாகவும் கவுதமி அதில் குறிப்பிட்டிருக்கிறார். காலம் வரும் போது காரணத்தை தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

‘நானும் கமலும் தற்போதும் ஒன்றாக இல்லை என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.13 ஆண்டு வாழ்க்கைக்கு பின்னர் நான் இதுவரை எடுக்காத ஒரு சோகமான முடிவை எடுக்க வேண்டிய நிலை நேரிட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் கமலின் ரசிகை. நான் அவரது ரசிகையாக கமலுடைய சிறப்பான நடிப்பை தொடர்ந்து ரசிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago