முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

51-வது பிறந்தநாள்: இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து

புதன்கிழமை, 2 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

மும்பை : இந்தி நடிகர் ஷாருக்கானின் தனது 51-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் ட்விட்டர் மூலம் வாழ்த்துமழை தெரிவித்தனர்.

உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான் ‘பவுஜி’, ‘சர்க்கஸ்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தார்.

‘பாஸிகர்’, ‘டர்’, ‘அன்ஜான்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் பிரகாசித்த ஷாருக் கான், ‘தில்வாலே துல்ஹனிய லேஜாயேங்கே’ படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்திப்பட கதாநாயகனாக உயர்ந்தார்.

2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியர் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் மோதும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர்களில் இருவராகவும் உள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றதுடன் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாரிக்குவித்து ‘பாலிவுட்டின் பாதுஷா’ ஆக திகழும் ஷாருக் கான் நேற்று தனது 51-வது வயதில் காலடி பதிக்கிறார்.

இதையொட்டி, பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் ட்விட்டர் மூலம் வாழ்த்துமழை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்