முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் ஒரு வேளை யாகசாலை பூஜையும் நடந்து வருகிறது. மேலும் வள்ளி தெய்வானை சம வேளையில் 6 வகையான நெய் வேத்தியம் படைத்து 6 சிவாச்சாரியர்கள் தீப தூப ஆராதனை செய்து இருவேளை சண்முகார்ச்சனை நடந்து வருகிறது.

இதோடு தினமும் இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவிலுக்குள் சத்திய கீரிஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெறும் "வேல்வாங்குதல்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (5-ம் தேதி) மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பாக "சூரசம்ஹாரம்" நடக்கிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாளை (6-ம் தேதி) காலையில் சட்ட  தேரோட்டமும் மாலையில் தங்க கவச அலங்காரம் மற்றும் பாவாடை தரிசனமும் நடக்கிறது. மேலும், இதேபோல் திருச்செந்தூர், பழனி ஆகிய முருகப்பெருமானின் திருத்தலங்களிலும் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்