முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.  சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகிற டிசம்பர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையில் மகா தீபம் 12-ந்தேதி ஏற்றப்படுகிறது. மேலும் 13-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து மக்கள் குவிவதால் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.சென்னை, சேலம், வேலூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் செல்கின்றன. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்