முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்த சஷ்டி விழா நிறைவாக சட்டத்தேர் பவனி : திருப்பரங்குன்றத்தில் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை :  கந்த சஷ்டி நிறைவாக மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று சட்டதேர் பவனி நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் தேரில் பவனி வந்த முருகனை தரிசித்தார்கள். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  கடந்த 31ம் தேதி  காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இந்த விழா நேற்று வரை  ஒரு வார காலம் நடைபெற்றது.

கந்த சஷ்டியையொட்டி, தினமும் காலையில்  ஒரு வேளை யாக பூஜை, இரு வேளை சண்முகார்ச்சனை இரவில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன.  காப்பு கட்டி விரதமிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இருவேளை கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 4ம் தேதியன்று வேல் வாங்குதலும் 5ம் தேதி சூரசம்சம்ஹாரமும் நடைபெற்றன.

கந்த சஷ்டியின் நிறைவு நாளான நேற்று காலையில்  சட்டத்தேர் பவனி நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டார். அவர் , தங்க மயில் வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ,வீர வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினார்கள் அவர்கள் சட்டத்தேரை வடம் பிடித்து கிரிவலம் வந்தார்கள். சட்டத்தேர் தென்றலாய் ஆடி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து பக்தர்கள் காப்பை கழற்றி விட்டு விரதத்தை முடித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்