முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டரிலிருந்து ஏரியில் குதித்து பலியான கன்னட நடிகர் உதயின் உடல் மீட்கப்பட்டது

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

பெங்களூரு  - கன்னட சினிமா படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்து நீரில் மூழ்கிய 2 நடிகர்களில் ஒருவரின் உடல்  மீட்கப்பட்டது.  கர்நாடக மாநிலத்தின் ராம்நகர் மாவட்டத்தில் திப்பகொண்டன ஹள்ளி ஏரி உள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் ‘மஸ்தி குடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது துனியா விஜய், வில்லன் நடிகர்கள் அனில், உதய் ஆகியோர் 100 அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதிக்கும் காட்சியை இயக்குநர் நாகசேகர் படமாக்கினார்.

அப்போது ஏரியில் குதித்த மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு சண்டை நடிகர் ஏரியில் குதித்து துனியா விஜயை மீட்டார். ஆனால் அனில், உதய் ஆகிய இருவரும் படக்குழுவினர் கண் முன்னே நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் 3 படகுகள் மூலமும், 25 நீச்சல் வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில்,நடிகர் உதயின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. சேற்றில் புதைந்திருந்த உதயின் உடலை நீச்சல் வீரர் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து உடல் மீட்கப்பட்டு, உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. காயங்களுடன் மீட்கப் பட்ட உதயின் உடலைப் பார்த்த படக்குழுவினரும், குடும்பத்தின ரும் கண்ணீர் விட்டு கதறினர்.

நடிகர் அனிலின் உடலை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளிட்டோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராம்நகர் போலீஸார் மஸ்திகுடி திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுத்ரு, இயக்குநர் நாகசேகர், சண்டைப்பயிற்சி இயக்குநர் ரவி வர்மா உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago