முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுனுக்கு ரூ.392 குறைந்தது

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : ரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதில் பீதியடைந்த நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள ரூ. 1000, 500 நோட்டுகளை நகையாக மாற்ற முயன்றனர்.

இதனால், நடைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் 6000 நகைக்கடைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 35,000 நகைக்கடைகளில் மக்கள் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை கொடுத்து நகைகளை வாங்கினர். இதனால், நகை விற்பனை அதிகமாகி விலையும் உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3060க்கும், ஒரு பவுன் ரூ.24,480க்கும் விற்கப்பட்டது.

அதாவது, ஒரு நாளில் பவுனுக்கு ரூ. 1,456 வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று காலை குறைந்தது. கிராமுக்கு ரூ.49 குறைந்து ஒரு கிராம் ரூ.3011க்கு விற்கப்பட்டது. பவுனுக்கு ரூ.392 குறைந்து ஒரு பவுன் ரூ. 24,088க்கு விற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்