சென்னையில் நகைக்கடைகளில் வருமான வரித்துறை ரெய்டு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சென்னையில் நகைக்கடைகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் தங்கம் வங்கிக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இதனையடுத்து சென்னையில் முக்கிய பகுதிகளில் தங்க கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மோசடி நடப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இன்றும் டெல்லி, மும்பை உள்பட நாட்டின் முக்கிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லியில் தரிபா கலான், சாந்தினி சவுக் உள்பட முக்கியமான 4 இடங்களில் உள்ள நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நகைக்கடை வியாபாரிகள் இன்று கடைகளை திறக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: