கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி? கூகுள் இணையதளத்தில் தேடிய புள்ளிகள்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2016      வர்த்தகம்
google(N)

சென்னை  - 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, கூகுள் இணையதளத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என அதிகம் பேர் தேடியுள்ளனர்.  கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் அதிரடியாக 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை, எவ்வாறு கணக்கில்வரும்படி காண்பித்து வெள்ளையாக மாற்றுவது என அதிகம்பேர் கூகுளில் தேடியுள்ளனர்.

இந்த பட்டியலில் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேலும், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ரூபாய் நோட்டுக்களின் புதிய அம்சங்கள் குறித்தும் தேடியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: