முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகுபலி’ தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

ஹைதராபாத்  - ‘பாகுபலி’ தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகங்களில்  திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் மற்ற தயாரிப்பாளர்கள், நடிகை, நடிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ‘பாகுபலி’ திரைப்படம் இதுவரை ரூ.600 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இதன் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக இதன் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சகுட்டா ஆகிய இடங்களில் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு தயாரிப்பாளர்களான பிரசாத் தேவிநேனி, ஷோபு யார்லகட்டா ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு திரை உலகில் உள்ள மற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.500, 1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டின் அதிக வசூலான திரைப்படமான பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்