முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை சபர்ணாவின் அறையில் மது, சிகரெட் தடயம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? போலீசார் சந்தேகம்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சபர்ணா நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

சபர்ணாவின் வீடு பூட்டாமல் சும்மா மூடியிருந்திருக்கிறது. படுக்கையறையில் சபர்ணா நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை மற்றும் சிறு கத்தி இருந்துள்ளது.

சபர்ணாவின் அறையில் டீக்கப்புகள், பல வகை சிகரெட் துண்டுகள் இருந்துள்ளன. மேலும் போதைப் பொருள் உட்கொண்டதற்கான தடயங்களும் இருந்துள்ளன. சபர்ணாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மது வாங்கி குடித்ததற்கான தடயங்களும் உள்ளது.

சப்ரணாவின் வீட்டில் இருந்து போலீசார் டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மூலம் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளதாம். தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி டெல்லி சென்ற இடத்தில் சபர்ணாவுக்கும் சினிமா பிரமுகர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

சபர்ணாவுக்கு சென்னையில் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவரும் உள்ளாராம். அவருடன் சபர்ணா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். கடைசியாக கூட அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago